Rabitatul Ulema (Urdu) – மார்க்க அறிஞர் பேரவை (உருது) 26.02.2022 சனியன்று காலை IIC ஹாலில் நடைபெற்றது. இதில் 22 உருது உலமா பெருமக்கள் கலந்துகொண்டனர். மௌலவி சமியுல்லாஹ் உமரி அவர்கள், நமது சமூகத்தின் சீர்திருத்தங்கள் குறித்தும் குறிப்பாய் வருகின்ற ரமளான் மாதத்தில் நமது சமூகத்திற்கு எத்தகைய வழிகாட்டுதல்களை நாம் தர கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதின் முக்கியதுவத்தையும் எடுத்துரைத்தார்கள். சிறந்த கருத்துப்பரிமாற்றங்கள், கலந்துரையாடல்களுக்கு இவ்வமர்வு இனிதே நிறைபெற்றது.
இவ்வமர்வில் இஸ்லாமிய சமூக மாநில துறைச் செயலாளர் ஜனாப் K.M. சிராஜ் அஹ்மத், மௌலவி சமியுல்லாஹ் உமரி, மெட்ரோ நாசிம் ஜனாப் நசீர் அதாவுல்லாஹ், மெட்ரோ ஆலோசனைக் குழ உறுப்பினர் ஜனாப் இம்ரான் லதீஃப் சேட் ஆகியோர் பங்கேற்றனர்.