நபிகள் நாயகம் (ஸல்) “மாமனிதர் மற்றும் இறைத்தூதர்” என்ற தலைப்பில் சென்னை ஜ.இ.ஹி மெட்ரோ சார்பாக ஒரு சிறப்பு நிகழ்ச்சி 30.6.2022 வியாழன் மாலை 6 மணியளவில் மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. நபி (ஸல்) அவர்களின் குண நலன்கள் பற்றியும் நாம் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் சகோதரர் இம்ரான் லத்தீஃப் சேட் அவர்கள் ஆங்கிலத்திலும் டாக்டர் கே. வி.எஸ் ஹபீப் முஹம்மது அவர்கள் தமிழிலும் உரையாற்றினார்கள். மெட்ரோ நாஸிம் அதாவுல்லா சாஹிப் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சியைப் பற்றிய அறிமுக அறிமுக உரை நிகழ்த்தினார். மாற்றுமத சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டனர்.