சென்னை மெட்ரோ கண்காணிப்பில் இருக்கும் கிளைகள் மற்றும் வட்டங்கள் அதனின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், ஊழியர்கள், அபிமானிகள் (ஆண்கள் / பெண்கள்) அனைவருக்கும், டிசம்பர் 17, 2022 | சனியன்று காலை 09:30 முதல் மதியம் 01:00 வரை Good Word Public Schoolல் 75 வருட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பிரச்சாரம் – விளக்க கூட்டம் ஒன்று நடைபெற்றது. அமீரே ஹல்கா மௌலவி ஹனீஃபா மன்பயீ அவர்கள் தலைமையுரையாற்றினார். ஜமாஅத் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு, அமீரே ஹல்கா மற்றும் Dr. KVS ஹபீப் முஹம்மத் அவர்கள், விளக்கமான பதிலளித்தார்கள். கடந்த “75 ஆண்டுகளின் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் செய்த பங்களிப்பு” பற்றி ஜனாப் யூசுப் பாஷா அவர்கள் விளக்கினார்கள். ஜனாப் நசீர் அதாவுல்லாஹ் அவர்கள் “75 வருட ஜமாஅத் பிரச்சாரம் – விளக்கம்” என் தலைப்பிலி உரையாற்றினார். ஜனாப் SN சிக்கந்தர் அவர்கள் “ஜமாஅத்தின் அறிமுகம் – தனி நபர்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சுமார் 300க்கும் மேலானோர் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.